சினிமா


Author: செல்லா

Pages: 220

Year: 2012

Price:
Sale priceRs. 110.00

Description

ஒரு கலைஞனின் முதல் தகுதி ரசனை. மதிக்கத்தக்க ரசனையும், அதைச் செயல்படுத்தும் திறமையும் கொண்ட அனைவருமே படைப்பாளிகள்தான். என்ன ஒன்று, வாய்ப்புக் கிடைத்தவர்கள்... வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்கள் என்கிற வேறுபாடு மட்டும்தான். செல்லா... இதில் இரண்டாவது வகைக்காரர். அதனாலேயே வென்றவர்களின் சாகசச் சூத்திரத்தை அவர்களின் வார்த்தைகளின் வழியே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தப் பின்புலமும் இல்லாமல், வாய்ப்புக்காகப் போராடி, கிடைத்த வாய்ப்பை சரிவரப் பற்றிக்கொண்டு, தான் நேசித்த துறையில் வெற்றியடைந்த சினிமா சாதனையாளர்களின் அனுபவத் தொகுப்புதான் இந்தப் புத்தகம். கதை முதல் போஸ்டர் வரை படிப்படியாக உருவாகி கடைக்கோடி ரசிகன் வரை சென்று சேரும் சினிமாவின் அத்தனைத் தடங்களையும் அடையாளப்படுத்துகிறது இந்தத் தொகுப்பு. இன்றைய சினிமா குறித்தும் வெற்றிக்கான போராட்டங்கள் குறித்தும் செல்லாவிடம் சில மணி நேரங்கள் பேசிய பிறகு நான் சொன்ன வார்த்தைகள் இவைதான்...

You may also like

Recently viewed