Description
இன்றைய இளைஞர்கள், உலக சினிமா பற்றி முன்பைக் காட்டிலும் பரவலாக அறிந்திருக்கிறார்கள். திரைப்படத் திருவிழாக்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று உலகத் திரைப்படங்களைக் கண்டுகளிக்கிறார்கள். இந்த மாற்றங்களுக்கும் மாறுதல்களுக்கும் இந்திய/தமிழ் சினிமாகர்த்தாக்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. உலகத் திரைப்படங்களைப் பற்றி அவர்கள் பேசும் போதும், எழுதும்போதும், யாவரும் அந்தப் படங்களை எளிதாக உணர முடிகிறது; புரிந்துகொள்ள முடிகிறது; தூரதேசத்து மக்களின் கலை _ பண்பாட்டை அறியவேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் எழுகிறது. விரைவாக வளர்ந்துவரும் விஞ்ஞான வளர்ச்சியிலும், நம்முடைய அண்டை நாட்டு மக்களின் கலாசார, பாரம்பரியமான வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்வதற்குக்கூட பலர் மெனக்கெடுவது இல்லை. ஆனால், உலகத் திரைப்படங்கள் அதையும் எளிதாக்குகின்றன. உலகத் திரைப்படங்கள் பற்றி, ஆனந்த விகடன் இதழ்களில் ஒளிப்பதிவாளர் செழியன்