அடேங்கப்பா ஐரோப்பா


Author: வேங்கடம்

Pages: 220

Year: 2012

Price:
Sale priceRs. 110.00

Description

இப்போதெல்லாம் சர்வதேச விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கமுடிகிறது. அரக்கோணத்துக்கும் அச்சரப்பாக்கத்துக்கும் இணையாக ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும், தனியாகவும் குடும்பத்துடனும் மக்கள் பயணிக்கிறார்கள். மேல் படிப்புக்காகவும், வியாபார நிமித்தமாகவும் விமானம் ஏறுபவர்களைத் தவிர, ஹாலிடேவுக்காக காமிரா சகிதம் ஊர் சுற்றிப் பார்க்க கிளம்புபவர்களும் அநேகம் பேர்! இப்படி, மேல் நாட்டுப் பயணம் மேற்கொள்பவர்களெல்லாம், அங்கே தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை எழுத்தில் பதிவு செய்துவிடுவதில்லை. அதிகபட்சம் தங்கள் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவற்றைப் பகிர்ந்துகொள்வதோடு சரி! அதேசமயம், வெளிநாட்டுப் பயணக்கட்டுரைகளைத் தமிழில் எழுதுபவர்களும் நிறைய பேர் உண்டு. வெறுமனே, தங்கிய ஓட்டல்கள் பற்றியும், சாப்பிடும் உணவு வகைகள் பற்றியும் எழுதுவதோடு, வெளிநாட்டு மக்கள் பற்றியும், பண்பாடு, கலாசாரம் பற்றியும், பார்க்கும் இடங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றியும் எழுதும்போது வாசிக்கும் சுவாரஸ்யம் அதிகமாகிறது.

You may also like

Recently viewed