மோட்டிவ் 6


Author: விகாஸ் ஸ்வரூப்

Pages: 280

Year: 2012

Price:
Sale priceRs. 140.00

Description

அச்சில் வெளியாகி, பிறகு திரைப்படமாக உருவான படங்கள் உலகெங்கிலும் ஏராளம். அதேபோல், உண்மைக் கதைகளாக வெளிவந்து... அச்சிலும், வெள்ளித் திரையிலும் வரவேற்பைக் குவித்த படைப்புகள் கணக்கற்றவை! ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் கதையே வேறு! ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்தாலும், இந்தக் கதை திரைப்படமாக வெளியானபோது எதிர்கொண்ட சர்ச்சைகளை நாமறிவோம். காரணம், அந்தக் கதையில் அணிவகுத்த காட்சிகள், இந்தியச் சூழல் பற்றி ஏற்படுத்திய அதிர்வலைகள்தான்! அதே விகாஸ் ஸ்வரூப் அளிக்கும் அடுத்த படைப்புதான் இந்த சிக்ஸ் சஸ்பெக்ட்ஸ் நாவல். இது, மோட்டிவ் 6 என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்தபோது, வாசகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது. தபாலிலும், இ-மெயிலிலும், தொலைபேசியிலுமாக அடுத்தடுத்த அத்தியாயங்களைப் பற்றி வாசகர்களின் விசாரிப்பு ஆச்சரியமானது! இதுவும்கூட, இந்திய அரசியல் - சமூக சூழலில் பொதிந்திருக்கும் நுணுக்கமான முரண்பாடுகளையும், அதிர்ச்சிமிக்க இருட்டு மூலைகளையும் வெளிச்சப்படுத்திக் காட்டுகிற படைப்புதான். தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் நாம் பார்த்தும் படித்தும் பதைபதைத்த பல விஷயங்களை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயமும் நினைவூட்டிக்கொண்டே போகும். அதை விவரிப்பதற்கு கதாசிரியர் தேர்ந்தெடுத்துக்கொண்ட கதை களமும், சம்பவச் சங்கிலியும், திடீர் திடீரென ஊடுருவும் நகைச்சுவைப் பிரயோகமும் உங்களை வேறோர் உலகத்துக்கே அழைத்துச் செல்வது உறுதி. ஜெட் வேகத் தமிழில் பல திருப்பங்களைக் கடந்து இதனை வாசித்து முடிக்கையில், அசாத்திய சிலிர்ப்பு நிச்சயம் உங்களை ஆட்கொண்டு இருக்கும்.

You may also like

Recently viewed