Description
தனிமனித சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றையக் காலகட்டத்தில், புதுமணத் தம்பதிகள் விட்டுக் கொடுத்து வாழ்வது என்பதே இல்லாத ஒன்றாகிவிட்டது. கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கும், நவீனகால நடைமுறைக்கும் இடையில் தொடங்கும் மோதல், நாளடைவில் பரஸ்பர உறவுகளிடையே குற்றம் காணும் சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது. உறவுகளிடம் நிலவும் கௌரவப் பிரச்னை, உணர்வு ரீதியான பொருத்தமின்மை, உடலுறவு சம்பந்தமானப் பிரச்னை, குழந்தைப் பேறின்மை தொடர்பான பதட்டம்... இப்படி, குடும்ப வன்முறைகளின் உச்சமாக மரணங்கள் சம்பவிப்பது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. வரதட்சணைக் கொடுப்பது பற்றி பெண் வீட்டாரின் விளக்கம், தம்பதியரிடையே ஏற்படும் மனக்கசப்புக்கான காரணம், பாரம்பரியமாக இருந்துவரும் மாமியார் - மருமகள் யுத்தத்துக்கான பின்னணி, இதில் கணவனின் பங்கு, இதற்கு சமூகத்தின் பார்வையில் உள்ள பதில், சட்டரீதியான நடைமுறைகள்... போன்ற குடும்பப் பிரச்னைகளுக்கான தெளிவான தீர்வுகளை