Description
வியாசரின் மகாபாரதக் கதையில் எத்தனையோ கதாபாத்திரங்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் போல இப்போது நாம் வாழ்க்கை நடத்துகிறோமா? அந்த மனிதர்களின் பண்பாடு நமக்குப் பாடம் கற்றுத் தந்திருக்கிறதா? நல்லவர்களாக வாழ்வது எத்தனை கடுமையானது என்பதை மகாபாரத மனிதர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்களா? _ இப்படி பல வினாக்களுக்கு விடை காணும் நூல் இது. வாழும் இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும், இழந்த இடத்தை மீட்கவும் மகாபாரத மனிதர்கள் செய்த சூழ்ச்சியையும், நடத்திய போரையும் மகாபாரதம் வாயிலாக நாம் அறிவோம். துரியோதனின் பொறாமை, திரௌபதியின் தீரம், யுதிஷ்டிரனின் கடமை, அர்ஜுனனின் அவதி, கர்ணனின் கவலை, கிருஷ்ணனின் சூழ்ச்சி... என மகாபாரத பாத்திரங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் பல செய்திகள் சொல்கின்றன. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் சென்றாலும் இந்த கதாபாத்திரங்கள் நிலைத்திருக்கும். ஏனெனில், மகாபாரதத்தில் உள்ளது எங்கும் உள்ளது; இதில் இல்லாதது வேறு எங்கும் இல்லை.