Description
திருமணமான பெண்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான இரண்டு கட்டங்கள் உண்டு. முதலில், கருவில் குழந்தை வளரும் பிரசவ காலம். அடுத்து, குழந்தை பிறந்த பிறகு, அதைத் தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் பரவச அனுபவம். மும்பையில் பிரபல குழந்தை நல மருத்துவராகத் திகழும் டாக்டர் ஆர்.கே.ஆனந்த் எழுதியிருக்கும் இந்த நூல், மேலே குறிப்பிட்ட இரண்டாவது கட்டத்தைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. பிரசவத்துக்காக மருத்துவமனைக்குப் புறப்படும்போது என்னவெல்லாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை விவரிப்பதற்கு முன்னால், குழந்தைக்குத் திட்டமிடுவது குறித்தும், கருவுற்றிருக்கும் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் கோடிட்டுக் காட்டுகிறார் டாக்டர் ஆனந்த். மருத்துவமனையிலும், பின்னர் வீட்டிலும் பிறந்த குழந்தையைப் பேணிப் பாதுகாக்கும் வழிமுறைகளுக்கு நூலாசிரியர் கொடுத்திருக்கும் டிப்ஸ், தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது குறித்து இந்த நூலில் காணப்படும் விளக்கங்கள், தாய்மார்களுக்கு சிறந்த பாடநூலாக இருந்து உதவும்.