Description
காளி என்றாலே எட்டு கைகளுடன், ஆயுதங்கள் பல ஏந்திக்கொண்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பீதியூட்டும் பயங்கரத் தோற்றத்தில் இருப்பவளாகத்தான் பொதுவாக எல்லோருக்கும் தெரியும். பத்ரகாளி என்றால் எல்லோரும் அறிவார்கள்! கோபக்காரர் என்றால் அவரை பத்ரகாளி என்று குறிப்பிட்டால் போதும். ஆனால் மகா காளியின் உண்மைத் தோற்றத்தை, அவளுடைய சாந்த சொரூபத்தை புத்தம்புது கோணத்தில் அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் சாம்பவி லொரைன் சோப்ரா. காளிக்கு எத்தனை பெயர்கள் உண்டோ அத்தனையையும் இந்த நூலில் தெரிந்துகொள்ளலாம். வட இந்தியாவில் காளியை எவ்வாறு பூஜிக்கிறார்கள் என்றும் அங்குள்ள சில காளி கோயில்களைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம். தன் உள்ளத்தில் காளி தோன்றிய இறைக் காட்சியைப் பற்றியும், சூட்சுமமாக, மன சாட்சியாகக் காளி பேசியதையும், இவற்றைப் போன்ற ஆச்சரியமானதும் அசாதாரணமானதுமான பல அனுபவங்களையும் உணர்ச்சிபூர்வமாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். Yogic Secrets of the Dark Goddess என்ற தலைப்பில் வெளிவந்த ஆங்கில நூலின் உள்ளடக்கத்தில் ஆழ்ந்து, அனுபவித்து, அழகாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார் கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ்.