Description
எம்.பி.ஏ. பட்டதாரி இளைஞர்களில் இரண்டு வகை உண்டு. இரு வருடப் படிப்பை முடித்த கையோடு நல்ல வலுவான, பிரபலமான நிறுவனமாகப் பார்த்து பணியில் அமர்ந்து, கை நிறையச் சம்பளம் பெற்று, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்பவர்கள் ஒரு வகை. இன்னொரு வகையினர் வாழ்க்கையில் மாறுபட்ட குறிக்கோள்களைக் கொண்டவர்கள். மற்றவர்களிடம் கை கட்டி சேவகம் புரிவதைத் தவிர்க்க நினைப்பவர்கள். சேமிப்பை உயர்த்திக் கொள்வதை மட்டுமே லட்சியமாக வைத்துக் கொள்ளாதவர்கள். படிப்பை மூலதனமாகக் கொண்டு சுய தொழிலில் ஈடுபட்டு, சமூகத்துக்குப் பயன்படும் வகையில் செயல்பட்டு, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள விரும்புபவர்கள். இந்த இரண்டாவது வகை எம்.பி.ஏ. பட்டதாரிகளைப் பற்றி பேசும் சுவையான நூல்