சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2)


Author: கே.வி. ராமநாதன்

Pages: 300

Year: 2012

Price:
Sale priceRs. 150.00

Description

சத்தியமூர்த்தி கடிதங்கள் நூலின் முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உங்கள் கரங்களில். சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரே மறைந்துவிட்ட சத்தியமூர்த்தியின் அரசியலில் சுதந்திர வேட்கையே முக்கியமாக இருந்தது. இந்தப் பின்னணியில், இந்த நூலில் இடம்பெற்றுள்ள கடிதங்களைப் படித்தால் சுதந்திரத்துக்கு முன் பாரதத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகப் பட்ட கஷ்டத்தையும் அந்தக் காலகட்டத்தில் நடந்த சில முக்கிய வரலாறுகளையும் உணர்ந்து இன்றைக்கு நாம் அடைந்துள்ள சுதந்திர பொக்கிஷத்தை மனதிலும் போற்றலாம்; அதைத் தக்கவைத்துக்கொள்ளவும் பாடுபடலாம். பிறருக்கு சத்தியமூர்த்தி எழுதிய கடிதங்கள், அவருக்குப் பிறர் எழுதிய கடிதங்கள், பத்திரிகைக் கட்டுரைகள், தந்திகள் ஆகியவை இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. வெறும் அரசியலை மட்டுமே கடிதங்களில் எழுதிக்கொண்டிருக்காமல் குடும்பங்களைப் பற்றியும் அரசியல் அல்லாத மற்ற விஷயங்களையும் பரஸ்பரம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். தன் மனைவியும் மகள் லட்சுமியும் விசாரித்ததாக சத்தியமூர்த்தியும் எழுதியிருக்கிறார்.

You may also like

Recently viewed