Description
இஐ அல்லது இக்யூ என்னும் இவ்விரு வார்த்தைகள் இன்று அனைத்து துறைகளிலும் பரவலாகப் பேசப்படுகிறது. மன அழுத்தங்கள் அதிகமாக உள்ள இன்றைய சூழ்நிலையில், பணிகளின் வெற்றிக்கு இக்யூ ஒரு முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது. இன்டலிஜன்ட் கோஷ?ன்ட் (ஐக்யூ) என்றால் அறிவுக் கூர்மை. எமோஷனல் இன்டலிஜன்ட் (இஐ) உணர்ச்சிக் கூர்மை அல்லது சமயோசித அறிவு என்று சொல்லலாம். எமோஷனல் கோஷன்ட் (இக்யூ)_ஐ உணர்ச்சிக் கோவை எனலாம். எமோஷனல் இன்டலிஜன்ஸ் அட் ஒர்க் என்று சேஜ் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட நூலின் தமிழ் வடிவம் இந்த நூல். நம் மன உணர்ச்சிகளை அறிந்து, புரிந்து செயல்பட இந்த நூல் பெரிதும் உதவுகின்றது. நூலாசிரியர் தலீப் சிங், மனோதத்துவ ரீதியில் இந்த விஷயத்தை மூன்றாகப் பிரிக்கிறார்... * உணர்ச்சி அதிகமாக இருத்தல் (தொட்டாற்சுருங்கி ரகம்) * உணர்ச்சிகள் முதிர்ச்சியாக இருத்தல் (ஆழ்ந்த உணர்வு ரகம்) * உணர்வுகளை திறம்பட சந்தித்தல் (திறம்பட எதிர்கொள்ளும் ரகம்) பணியிடங்களில் நிகழும் மாற்றங்களை திறம்பட சந்தித்து, கருத்து வேற்றுமைகளைத் தீர்த்து, உற்பத்தியைப் பெருக்கும் வழிகளை இந்த நூலில் எளிமையாக விளக்குகிறார் தலீப் சிங்.