Description
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நிச்சயம் யாராவது ஒருவரில் உங்களைக் காண்பீர்கள். உங்கள் பணியிடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தத் துறையாகவும் இருக்கலாம். ஆனால், இந்தக் கதைக்களமான தொழிற்சாலையின் பிரச்னைகளும் நிகழ்வுகளும் நிச்சயம் உங்கள் பணியிடத்திலும் எதிர்ப்படக் கூடியவைதான். ஒரு தொழிற்சாலையில் புதிதாக அதிகாரியாகப் பதவியேற்ற ஒருவர், நலிந்து கிடக்கும் அதன் இக்கட்டான சூழலிலிருந்து, அந்த நிறுவனத்தை எப்படி மீட்டெடுக்கிறார்... மீண்டும் லாபம் ஈட்டித்தரும் தொழிற்சாலையாக அதை எப்படி மாற்றுகிறார்... இந்த மீட்புப் போராட்டத்தில் தொழிற்சாலைப் பணிகளிலேயே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அந்த அதிகாரி, தன் மனைவியுடன் இரவு உணவு வேளைகளில்கூட கலந்துகொள்ள முடியாத அளவுக்கு பணிச்சுமை அவரை எப்படி வாட்டியெடுக்கிறது... அதனால் மனைவியைப் பிரிந்து வாடும் அவர், எத்தகைய மனத் துயரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது...