Description
அறுபது வருடங்களுக்கு முந்தைய ஆனந்த விகடன் இதழ்களைப் புரட்டிப் பார்க்கும்போது, அந்த நாட்களில் வெளியாகியிருக்கும் தலையங்கக் கட்டுரைகளும், கார்ட்டூன்களும் பிரமிக்கவைப்பதாக இருக்கின்றன. முக்கியமாக, ஒவ்வொரு வாரமும் இடம்பெற்றிருக்கும் கார்ட்டூன்கள், அன்றைய சர்வதேச அரசியல் சூழலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. சுதந்திரம் கிடைத்த பிறகு, இந்திய அரசியலின் பின்னணியையும் கார்ட்டூன்கள் வாயிலாகப் புரிந்துகொள்ள முடிகிறது. 1949_ல் தன்னுடைய கார்ட்டூன்கள் மூலம் விகடனுக்குள் பிரவேசித்திருக்கிறார் ஸ்ரீதர். ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாட்டுநடப்பு குறித்த அவருடைய விமரிசனங்கள், கிண்டலும் கேலியும் கலந்து, கேலிச்சித்திரங்களாக அணிவகுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது. அதோடு, அரசியல் மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் அறிய முடிகிறது. ஆரம்பத்தில்