30 நாள் 30 சமையல்


Author: ரேவதி சண்முகம்

Pages: 320

Year: 2012

Price:
Sale priceRs. 160.00

Description

ஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்கள். என்ன சாப்பாடு செய்யலாம், என்ன குழம்பு வைக்கலாம்? என்று சிந்தித்து, ருசியாகச் சமைத்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாற நேரம் இருந்தது. ஆனால், இப்போது பல இல்லத்தரசிகள் வேலைக்கும் சென்று அலுவலக வேலைகளையும் சுமக்க ஆரம்பித்து விட்டார்கள்.பலவிதமான மக்களுடன் நெருங்கிப் பழகி வேலை செய்துவரும் சூழ்நிலையில், அவர்களது நடை, உடை, கலாசாரத்தைக் கற்றுக்கொண்டது போல, உணவு பழக்க வழக்கங்களிலும் அவர்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள். ஆக, நமது உணவுக் கலாசாரமும் மாறிவிட்டது.சுருக்கமான செலவில் வீட்டிலுள்ள சமையல் பொருட்களைக் கொண்டே விதம் விதமான _ சுவையான சமையல் வகைகளைச் செய்து ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இந்த 30 நாள் 30 சமையல் புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். இந்த சமையல் குறிப்புகள் அவள் விகடன் இதழுடன் இணைப்புகளாக வெளிவந்தபோதே வாசகிகளிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

You may also like

Recently viewed