Description
டி.ஆர். கார்த்திகேயன்
1939ம் ஆண்டு கோவை மண்ணில் பிறந்த டி.ஆர். கார்த்திகேயன் விவசாயம் மற்றும் சட்டத்தில் பட்டம் பெற்றவர். 1964ம் ஆண்டு இந்தி ய க ாவல் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் 'பணியில் சேர்ந்தார். கர்நாடக மாநில உளவு ) மற்றும் பாதுகாப்பு தலைவர் உட்பட 'பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ள இவர் மத்திய ரிசர்வ் போலீஸ்
'படையின் தென்மண்டல இயக்குனராக இருந்தபோது, ராஜிவ் காந்தி படுகொலையை புலனாய்வு செய்வதற்காக மத்திய அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். சவால்கள் நிறைந்த அந்தப் புலனாய்வுப் பணியினை வெகு சிறப்பாக செய்து முடித்தமைக்காக உச்சநீதி மன்றத்தின் பாராட்டைப் பெற்றவர் இவர். சி.பி.ஐ. இயக்குனராக இருந்து, ஓய்வு பெற்ற பின் தேசிய மனித உரிமை ஆணையம் இவரை அழைத்தது. தற்போது கார்த்திகேயன், மதநல்லிணக்கம், உலக அமைதி மற்றும் ஆன்மிக அமைப்புகளுடன் இணைந்து சேவை புரிந்து வருகிறார். மனித உரிமை , தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து புத்தகங்கள் எழுதியுள்ள இவர், இவை குறித்து உலகளாவிய கருத்தரங்குகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்.