சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல்


Author: விமலாதித்த மாமல்லன்

Pages: 360

Year: 2018

Price:
Sale priceRs. 120.00

Description

விவகாரத்தின் அறிமுகம் ட்விட்டர் என்கிற சமூக வலை தளத்தில் பாடகி சின்மயி ஐஏஎஸ் படிக்க நினைத்த தனது கனவு சமூகத்தில் உள்ள இட ஒதுக்கீடு காரணமாய் நிறைவேறாது போய்விட்டதாக 04 ஜனவரி 2011 அன்று சில ட்விட்டுகளை இடுகிறார். அவரது விசிறிகளில் ஒருவரான ஆர்த்தி உரையாடலில் இணைகிறார். ”தாழ்த்தப்பட்டவர்கள் என்று ’சொல்லப்படுகிறவர்கள்’ என்று எவரும் இல்லை என்று சின்மயி ஆங்கிலத்தில் கூறுகிறார். இந்தச் சொற்கள் சமூக விழிப்புணர்வுள்ள தமிழ் ட்விட்டர்களின் கவனத்தைக்கவரவும் அவர்கள் இவருடன் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்குகின்றனர். இது மிக நீண்ட விவாதமாகவும் இடையிடையே உரசலாகவும் விரிகிறது. விவாதம் கண்ணியமாகவே நடந்தாலும் சின்மயியின் பொது அறிவின் போதாமை, பிராமணீய விழுமியங்கள் மற்றும் அவரது ஜாதீய மனோபாவம் ஆகியவை எல்லோர் பார்வையிலும் படும்படியாக பொதுவெளியில் அம்பலப்படுகின்றன. இது, அவமானத்தையும் தான் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதான எண்ணத்தையும் சின்மயிக்குள் விதைக்கிறது. இந்த விவாதத்தில் பங்குபெற்ற சிலருக்கும் தூர இருந்து கவனித்துக்கொண்டிருந்த முதிர்ச்சியற்ற பல இளம் தமிழ் ட்விட்டர்களிடையேயும் சின்மயி மீதான இளக்காரத்தையும் எகத்தாள மனோபாவத்தையும் எரிச்சலையும் கோபத்தையும் இந்நிகழ்வு உருவாக்குகிறது. சின்மயி இவர்களில் பலரையும் தன் வழியில் தன் ட்விட்டுகளில் குறுக்கிடாதபடி தடை செய்கிறார். தடைசெய்யப்படுவதென்பது அவமானகரமான செயல் என்பதால் தடைசெய்யப்பட்டவர்கள் மனதளவில் சின்மயிக்கு எதிரிகளாகிறார்கள். இது இரு சாராருக்கும் இடையே விரிசலாக உருவாகிறது.

You may also like

Recently viewed