Description
திரைப்படத் திறனாய்வாளர் அறந்தை நாராயணன் அவர்கள் எழுதியது
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் விவரிக்கிறது. 1931ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் வாழ்வோடும் போராட்டங்களோடும் தமிழ் சினிமா கொண்டிருக்கும் உறவை இந்த நூல் விவரிக்கிறது. சாதனை நிகழ்த்திய திரைப்படங்களின் கதைகளையும் பாடல்களையும் அவற்றைத் தந்த கலைஞர்களின் வரலாற்றோடு இணைத்து இந்த நூல் கூறுகிறது