Description
“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு உட்படுத்த முடியும். நாவலில் வரும் தேவகிருபை என்பவர் கூறுவார்; “வரலாற்றுக்குள்ளே தேடு, அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய் விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்”. எதைத் தேடுவது. எப்படித் தேடுவது என்று நமக்குக் காட்டும் ஒளிவிளக்கு இந்நாவல்!