Description
அந்த நாவலை டைப் செய்து அப்பொழுது விளம்பரப்படுத்தப்பட்டிருந்த ஒரு சர்வதேச நாவல் போட்டிக்கு அனுப்பினேன்.நாவலுக்கு பரிசு வரவில்லை ஆனால் பிரசுரிக்க ஏற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்லி ஒரு ஆயிரம் டாலர் ராயல்டி முன்பணமும் ஒரு காண்டிராக்டும் அமெரிக்கப் பிரசுராலயத்திலிருந்து வந்தது.அச்சுக்கு நூலைக் கொடுக்கும்போது அதில் சில மாறுதல்கள் செய்ய வேண்டும் என்று எழுதினார்கள்.முக்கியமாக,அவதூதர் சித்து விளையாடுவதாய் வருகிற இடங்களை மாற்ற வேண்டும்,பகுத்தறிவுக்கு இந்த அதிசயங்கள் ஒத்துவரவில்லை என்றார்கள்.நான் மறுத்துவிட்டேன்.இந்த நம்பிக்கைகள்,அதிசயங்கள்,இந்த சமூதாயத்தில் ஒரு பகுதியினரிடம் உள்ளவை என்று..