Description
வெற்றி விதிகளின் கோட்பாடுகளை ஆராயும் பணி, 1908ல் ஆரம்பமாயிற்று. எக்கு தொழிலின் சக்ரவர்த்தியாக இருந்த ஆண்ட்ரு கார்னகியை பற்றி ஒரு கட்டுரை எழுதுவதற்காக அவரை பேட்டி காண நெப்போலியன் ஹில் சென்றிருந்தார். இளம் எழுத்தாளராக இருந்த நெப்போலியன் ஹில்லை கார்னகிக்கு பிடித்துப்போய்விட்டது. பேட்டி மூன்று நாள் தொடர்ந்தது. அப்போது அமெரிக்காவில் செல்வாக்கோடு திகழ்ந்த பல பெரிய மனிதர்களை ஹில்லுக்கு அறிமுகப்படுத்தினார். அந்த மனிதர்களின் வெற்றி ரகசியங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள ஊக்கம் அளித்தார். நெப்போலியன் ஹில் வெற்றிச் சூத்திரத்தை உருவாக்கினால் அதை பயன்படுத்தும், ஒவ்வொரு தனி மனிதனும் தன் சொந்த வெற்றியைப் படைத்து கனவை நனவாக்கிக் கொள்ள முடியுமென்று நம்பினார் கார்னகி. 1927ம் ஆண்டு அவர் தனது வெற்றி விதிகளின் முதல் பதிப்பை வெளியிட்டார். 8 வார்ல்யூம்களும் உடனே விற்று தீர்ந்து விட்டது என்று இந்த நூல் உருவான அந்த வெற்றி விதிகள் எல்லாக் காலத்துக்கும் ஏன் இப்போது கூட கச்சிதமாக பொருந்துவதுதான் வியப்பு. தினமலர் 25, மார்ச் 2012.