Description
சைவமும் வைணவமும் தொன்மையான வழிபாட்டு சமயங்கள். தமிழகத்திலுள்ள பிரம்மாண்டமான ஆலயங்களின் கட்டடக்கலை அமைய, சமய உணர்வும் சமூக உணர்வும் பேணப்
பட்டுள்ளதை சிந்தனை ரீதியாகப் பண்படுத்தியதை நூலில் காண்கிறோம்.
சிந்து சமவெளியில் கிடைத்த புதைபொருள்களிலேயே லிங்க வழிபாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதன்மூலம் தமிழகத்துக்கும் சிந்து சமவெளிக்கும் இடையிலான ஒருமைப்பாடு கவனிக்கத்தக்கது.
சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளையும் தோற்றுவித்தது சிவபெருமான் என்பதே தமிழர்களின் தலையாய நம்பிக்கை. வைணவமும் பழந்தமிழ் இலக்கியங்களில் பாடப்படும் வழிபாட்டு நெறியாகும். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களில் வைணவத்தின் முதற்பெரும் கடவுளான விஷ்ணு போற்றப்படுகிறார். இதிகாசங்கள் தமிழகத்தில் செலுத்தும் செல்வாக்கு சாதாரணமானதல்ல என்பதையும் நூல் பதிவு செய்கிறது.
தமிழக அரசால் வெளியிடப்பட்ட நூலின் புதிய பதிப்பே இந்நூல். இரு சமயங்களின் தனித்த குணங்கள், நூல்கள், சித்தாந்தங்கள், சமயச் சான்றோர்கள், விழாக்கள் தொடர்பான தனித்தனியான இரு பகுதிகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. தமிழ், சம்ஸ்கிருத நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. பண்பாட்டு வளர்ச்சியில் பேரிடம் வகிக்கும் சைவம், வைணவத்தின் சிறப்பம்சங்களை நூல் கோடிட்டுக் காட்டி இருக்கிறது.