Description
விரகதாபம் என்பது மிருககுணம் அல்ல. மனிதகுணமே! விரகதாபம் ஒளி வடிவம்...ஒலி வடிவமும் கூட! கலவி இன்பம் வெறும் உடல் உராய்வு மட்டும் அல்ல!
காமம் மட்டுமே மனதின், உடலின் தினவைத் தீர்க்கும் மாபெரும் தவம்.
அதுவும் ஒரு இறை தேடல் முயற்சியே! விண்டவர் கண்டதில்லை ! கண்டவர் விண்டதில்லை!
இரு உள்ளங்களும் மனோலயமாக முயங்கிப் புதையும் ஆழமான தெய்வீகப் புதையல்!
பேரின்பக் குழியைத் தோண்டித் தோண்டி தேடிக்கொண்டே செல்லலாம் இன்ப லோக அடி ஆழம் அறியும் வரையில்!.
பெண்களின் அழகில் பலவகை உண்டு!
சிலரது அழகு பார்த்தவுடன் மயக்கும். பழகினால்கசக்கும். சிலரது அழகு பார்க்கையில் திகட்டும். பழகப்பழக இனிக்கும். மிக சிலரது அழகே பார்க்கையிலும்,பழகுகையிலும் தித்திப்பாய் திமிரும். சக்குபாய் அப்படித்தான்!
அந்தப்புரம் குலுங்கியது!
ரத்த வாடை கண்டு நீண்ட பசியுடைய வேங்கை தன் தாபத்தை முடித்ததாக தானே நினைத்து வெளிவந்தது..!?
ரத்தினக்கம்பள விரிப்பில் கசங்கிக் கிடந்த சக்குபாயின் கண்ணில் கண்ணீரில்லை!
வெடித்துப்போன உதட்டில் மட்டும் வெறியான புன்னகை!
சிரித்தாள்...சிரித்தாள்...சிரித்துக்கொண்டே இருந்தாள்!