Description
காசும், பிறப்பும் என்கிற இந்நாவல் எனது நண்பர் திரு. பொன். சந்திரசேகர் அவர்கள் வெளியிடும் பல்சுவை நாவலில் இரண்டு பாகமாக வெளிவந்தது. மாதநாவலுக்கு எவரோ கற்பித்த சிறுமையை உடைத்தெறிந்தது. ஒரு நாவலை இரண்டு மாதம், இரண்டு பாகமாக வெளியிட்டால் சரியாகப் போகாது என்றிக நியதியைத் தூள்தூளாக்கியது. மாதநாவல் என்பது நாற்பது பக்கச்சிறுகதை என்பதும் நகர்ந்தும் நூற்று எண்பது பக்கத்திற்கு கனமாய்க் கொண்டு வந்து கொடுக்க வாசகர்கள் ஆவலாக வாங்கினார்கள்.