Description
அரசுப்பணி என்பது குதிரைக்கொம்பாக இருந்த காலம் மலையேறிவிட்டது. ஆயிரக்கணக்கான பணியிடங்களைப் போட்டித் தேர்வுகளின் மூலமாகவே நிரப்ப இருக்கிறது அரசு. வரும் காலங்களில் அரசு நிறுவனங்களில் காலியாகும் பணியிடங்கள் இன்னும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால், முறையாகப் படித்து அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் அரசுப் பணி நிச்சயம் சாத்தியம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது, விழுந்து விழுந்து படித்தால் மட்டும் போதாது. தேர்வு நுட்பம் அறிந்து, எத்தகைய கேள்விகளுக்கு ஒவ்வொரு தேர்வுகளின் போதும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சமீப காலங்களில் நடந்தப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பாடத் திட்டங்களின் அடிப்படையிலான கேள்விகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. குறிப்பாக ஆறாம் வகுப்பிலிருந்து 12&ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களில் இருந்து நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதன்படி கணிதப் பாடத்தின் அனைத்துவிதமான கேள்வி பதில்களும் இந்த நூலில் சீராகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கிறது. அதிகமாகக் கேட்க வாய்ப்பிருக்கும் கேள்விகளைச் சரியாக அனுமானித்து, அவற்றைச் சரியாக வரிசைப்படுத்தி இருக்கிறார் நூல் ஆசிரியர். கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்கும் நூதனம் அறிந்து, அதன் அடிப்படையிலான கேள்வி & பதில்களையும் தொகுத்திருப்பது தனிச்சிறப்பு. பாடத் திட்ட அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்த நூல் இளைய தலைமுறையினரின் கணித அறிவைத் திறம்பட மேம்படுத்தி, போட்டித் தேர்வுகளுக்கு ஆகச்சிறந்த உறுதுணையாக விளங்கும். மாதிரித் தேர்வுக்காகப் பயிற்சி வினாக்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நூல் TNPSC - GROUP II, GROUP IV, UPSC - CSE, TET,VAO உள்ளிட்ட எல்லாவிதப் போட்டித் தேர்வுகளுக்கும் மிக எளிமையான வழிகாட்டியாக விளங்கும் என்பது நிச்சயம்!