புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு


Author: டாக்டர் தமிழண்ணல்

Pages:

Year: NA

Price:
Sale priceRs. 200.00

Description

இந்திய நடுவண் அரசு 12.10.2004 அன்று, தமிழ் மொழியைச் 'செவ்வியல் மொழி' (Classical language) என, அறிவித்தது. மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (Central Institute of Indian languages), 'செவ்வியல் தமிழ் உயர்தகவு ஆய்வு மையத்தின்' (Centre of Excellence for classical Tamil) மூலம், செவ்வியல் தமிழுக்கான திட்டங்களை வகுத்து, படிப்படியாகச் செயலாற்றி வருகிற து. சென்னையில் தலைமையகம் அமையவுள்ளது.
உலகில் தொன்மைமிக்க காலந்தொட்டு, வளமுடன் திகழ்ந்த சில மொழிகளே இவ்வாறு, செவ்வியல் மொழி (Classical language) என அழைக்கப்பட்டன. கிரேக்கம்) இலத்தின், சமஸ்கிருதம், சீனம், பாரசீகம், அரேபியம், ஹீப்ரு எனப்படும் எபிரேயம்.
இவற்றுட் சில சமயம், தத்துவம், மெய்ம்மைச் சிந்தனை சார்ந்தவை; அவை இன்று வழக்கில் இல்லாமலும் போயின. தமிழ் ஒன்றே, கிரேக்கத்துடன் ஒப்பிடக் கூடியதாய், தொன்மை மிக்க காலந்தொட்டே, இலக்கிய மொழியாக அமையவுள்ளது

You may also like

Recently viewed