Description
உலகம் புகழும் உன்னதக் காவியங்களை இயற்றிய காளி அருள்பெற்ற, ஒப்பற்ற கவியாகிய காளிதாசர் ஜோதிடத்திலும் முத்திரை பதித்துள்ளார். அவரது அரிய நூலான இந்த 'உத்தர காலாமிர்தம்' இப்போதுதான் நம்மவர்க்கு அறிமுகமாகிறது. இது ஜோதிடத்தில் ஒரு ஒப்பற்ற நூலே! ஜோதிடத்தின் அனைத்துப் பகுதிகளும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ஜோதிடம் கற்போருக்கும், கற்றோருக்கும் உறுதுணை யாகும் நூல் என்றே சொல்ல வேண்டும். ஜோதிடம் தவிர நமது இந்து தர்மக் கோட்பாடுகளும், நாம் பின்பற்ற வேண்டிய நடை முறைகளும் தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டு இருப்பது நூலுக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது. உரையாசிரியரின் எளிய நடை படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டுகிறது.