Description
ஜோதிடக்கலை மிகவும் நுணுக்கமான ஒரு கலை. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றால் ஏத்துணைப் புத்தகங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். அனால், அந்தக் கலை பற்றி ஓரளவு தெரிந்து கொள்வதற்கும் அதிலே ஓரளவு நல்ல பயிற்சி பெறுவதற்கும் இந் நூல் போதுமானது. இது உங்களுக்குப் பெரிதும் உதவும். ஜோதிடக் கலை பற்றிய அடிப்படை விஷயங்கள் அனைத்தும் இதனுள் மிகத் தெளிவாகவும் மிகமிக எளிய முறையிலும் சொல்லப்பட்டுள்ளன. ஓரளவே எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும்கூட ஜோதிடக் கலையை அறிந்து தெளிவுறும் வண்ணம் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. வேறு யாருடைய உதவியும் இன்றித் தங்களுக்குத் தாங்களே படித்து அறிந்து, நிகழ்கால, எதிர்காலப் பலாபலன்களைத் தெரிந்து கொள்ளலாம். தங்களுடைய, தங்கள் குடும்பத்தாருடைய, தங்கள் சுற்றத்தாருடைய ஜாதகங்களைக் கணிக்கலாம். ஜன்ம ஜாதகம், நவாம்ஸ ஜாதகம், பெண்ணின் ருது ஜாதகம் முதலியவை கணிப்பதற்கான முறைகளும், திருமணப் பொருத்தம், நவரத்தினப் பொருத்தம் முதலியவை பற்றி அறிவதற்கான முறைகளும் சொல்லப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒருவர் ஜோதிடக் காலையில் நல்ல பாண்டித்தியம் பெற இந்நூல் மிகவும் துணைநிற்கும் என்பது உறுதி. இந்நூல் பல ஜோதிடர்களை உருவாக்கியுள்ளது என்பதும் ஒரு தனிச் சிறப்பாகும். இப்புத்தகம் 1977ல் வெளிவந்து, முப்பது பதிப்புகளைத் தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இரண்டாம் பாகமும், மூன்றாம் பாகமும் சந்தையில் இருப்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும்.