Description
திருப்பூருக்குப் போனா, எப்படியும் பிழைச்சுக்கலாம் என்னும் நம்பிக்கையை உண்மையாக்கும் தமிழகத்தின் தொழில் நகரம் அது. அந்த நகருக்கு வரும் ஒரு கிராமத்து இளைஞனின் அனுபவத் தொடராகத் தொடங்கும் இந்த டாலர் நகரம், அந்நகர் குறித்த உண்மைகளின் தரிசனமாய் விரிகிறது. சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகியாக உயர்ந்திருப்பவர் திருப்பூர் ஜோதிஜி. தான் சார்ந்த தொழில்துறையின் நுணுக்கங்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பவர். எழுத்து, வாசிப்பு, என்பவற்றில் ஆர்வம் மிகுந்தவர். அதற்கும் மேலாக சமூகம் சார்ந்த அக்கறை மிக்கவர். அவரது அனுபவ எழுத்துக்களில் மிளிர்கிறது டாலர் நகரம்.