Description
தமிழ்மகனின் எழுத்து நடை நம் கண் முன்னே அந்த காட்சிகளை ஒளிரவிட்டு பயணிக்கிறது. நீங்கள் அதை வாசிக்கும்போது என் வார்த்தையின் உண்மையை உணர்வீர்கள்.
படித்து முடித்ததும் மனம் பாரமானது. படைவீட்டுக்கு சென்று வர வேண்டும் என்று மனம் துடித்தது.
சனாதன விஜயநகரத்தின் படையெடுப்பால் தமிழ் நிலத்தை ஆண்ட கடைசி தமிழ் மன்னர்களான சம்புவ மன்னர்கள் வீழ்ச்சிக்குப் பின் இந்த இனம் எழவே இல்லை என்ற இன்றைய எதார்த்தத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
உண்மையில் இப்படியான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்து எழுத முடிவு செய்த தமிழ்மகனின் துணிச்சல் தமிழினத்தால் கொண்டாடப்பட வேண்டியது.
இந்த நாவல் வந்தால் விஜயநகரத்தின் படையெடுப்பின் தொடர்ச்சியாக தமிழ் நிலத்தை சூறையாடிக் கொண்டிருக்கும் திராவிட கம்பெனிகளின் முற்போக்கு பிற்போக்கு அரசியல் தன்னை எப்படி புறக்கணிக்கும்.. வீழ்த்தும்.. என்பது குறித்த எந்த கவலையும் இல்லாமல் தனக்கு தெரிந்த உண்மையை படைப்பாக்கியிருக்கிறார்.
- -கார்ட்டூனிஸ்ட் பாலா