Description
தந்தை பெரியார் தான் விரும்பிய சமூக மாற்றங்களையெல்லாம் உருவாக்கப் பல இதழ்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் நடத்தி வந்தார். குடியரசு, புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, உண்மை, திராவிடன் ஆகிய தமிழ் இதழ்களும் ரிவோல்ட், ஜஸ்டிசைட், தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகிய ஆங்கில இதழ்களும் நடத்திய பழுத்த அனுபவம் வாய்ந்தவர். 19ஆம் நூற்றாண்டிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்திலும் வெளியான பெரும்பாலான இதழ்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் அல்ல; லோகோபகாரி, தேசோபகாரி, தேஜோபிமானி, ஜனாநுகூலன் போன்ற பெயர்களாக இருந்தன. இந்நிலையில் பெரியார், 'குடிஅரசு! என்னும் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்று 1922ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சிறைவாசம் இருந்த போது நினைத்தார். அதுபோன்றே 1-5-1925-ஆம் நாளன்று குடிஅரசைத் தொடங்கி விட்டார். இந்நூல் தந்தை பெரியாரின் இதழியல் பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது.