Description
கர்ணனைப் பற்றிய திறனாய்வு நூல். கர்ணன் ஒரு தான, தர்ம வீரன். யாராலும் வெல்ல முடியாத வில் வீரன். கொடை வள்ளல் என்று மொத்த உலகமுமே இப்படித்தான் அவனைச் சொல்கிறது. ஆனால் கர்ணன் எதை தானம் செய்தான்? எப்போது தானம் செய்தான்? யார் யாருக்கு தானம் செய்தான்? இக்கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.மேலும் கர்ணன் வாழ்ந்த காலம் முழுவதுமே ‘நான் யார்? என் குலம் என்ன?’ என்ற கேள்விகளோடேயே அலைந்தான். மன நிம்மதியையும் இழந்தான். ஒரு நாள் தான் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டான். எப்படி?அர்ச்சுனன் தர்ம யுத்தம்தான் செய்தானா? அல்லது யுத்த தர்மத்தை மீறி பாரதப் போரில் கர்ணனை கொலை செய்தானா? இதுபோன்ற கருத்துக்களை கேள்விக்குறிகளாக்கி இத்திறனாய்வு நூலை வித்தியாசமான கண்ணோட்டத்தில் புதுமையான கருத்துக்களுடன் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர் எஸ். விஜயராஜ்.- தினத்தந்தி, 2/10/2013.