Description
தமிழ்நாடு அரசுப் பணியாளர் போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘போட்டித் தேர்வுக் களஞ்சியம்’ வரிசையில் இரண்டாவது. பாட புத்தகத்தைப் படிக்கும்போது படிக்கும் விஷயத்தைக் கிரகித்துக்கொள்கிறோம். சில சமயம் மேற்கொண்டு படிப்பதற்கு என்று அதிலேயே சில புத்தகங்களை மேற்கோள் காட்டுவதும் உண்டு. ஏனென்றால் புத்தக ‘ஸ்கோப்’பைத் தாண்டிய ஆனால், தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கும். மேற்கொண்டு இருக்கும் விஷயங்களைப் பாடுபட்டுச் சேகரிக்க வேண்டும். ஆனால், இந்தப் புத்தகம் அனைத்தையும் மொத்தமாகத் தருகிறது. இந்திய வரலாறு பண்பாடு ஆகியவற்றைப் பற்றி போட்டித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலை அறியப் பயன்படும் வகையிலும் அந்தக் குறிப்பிட்ட விஷயங்களை அங்கங்கே தேடிக்கொண்டு இருக்காமல், ஒரே இடத்தில் தொகுத்து இந்தப் புத்தகத்திலேயே அனைத்து விஷயங்களும் வரிசைவாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, சிந்து சமவெளி நாகரிகம், பண்டைத் தமிழகம், பௌத்தம், சமணம், பேரரசுகளின் தொடர்ச்சி, டெல்லி மொகலாயர் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சி, நேரு யுகம், இந்திரா யுகம் என அனைத்து விஷயங்களும் சின்னஞ்சிறு குறிப்புகளாக தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்பாட்டுப் பகுதியிலும் இந்து மத நூல்களில் தொடங்கி, பக்தி இயக்கம், ராமாயணம், மகாபாரதம், தமிழர் பாரம்பரியம், கலாசாரம், சங்கத் தமிழ், தமிழ் நூல்கள், தற்கால இலக்கியம், நுண் கலைகள் என அனேக விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவ்வப்போது எடுத்துப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளவும், போட்டித் தேர்வுகளுக்கு ஆழ்ந்து படிக்கவும் தேவையான ஒரு நூல்!