Description
இந்திய சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த வேளையில், கையில் துப்பாக்கி ஏந்தினால்தான் வெள்ளையர்களை விரட்ட முடியும் என்று சில இளைஞர்கள் எண்ணினார்கள்.அவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். தெற்கே வாஞ்சிநாதன், வடக்கே பகத்சிங். வெள்ளையர்கள் நடத்திய தடியடியில் காங்கிரசின் மூத்த தலைவர் லாலா லஜபதி ராய் கொல்லப்படுகிறார். இதற்கு பழிக்குப் பழி வாங்க சபதம் செய்கிறார் பகத்சிங்.ஒரு வெள்ளைக்காரரை சுட்டுக் கொல்கிறார். பாராளுமன்றத்தில் வெடிகுண்டுகளை வீசுகிறார். அதனால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. தூக்குக்கயிற்றை முத்தமிட்டு மரணத்தைத் தழுவியபோது, பகத்சிங்குக்கு வயது 23தான்.பகத்சிங்கின் வீர வரலாற்றை, நெஞ்சைத் தொடும்படி எழுதியிருக்கிறார் என். சொக்கன்.நன்றி: தினத்தந்தி, 11/12/13.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்திய இளைஞர்களின் நெஞ்சில் சுதந்தர நெருப்பைப் பற்றவைக்கவேண்டும். அதுதான் பகத் சிங்கின் ஆகப்பெரிய லட்சியம். அதைச் சாதித்துவிட்டால் போதும், சுதந்தரம் தொட்டுவிடும் தூரம் என்று பரிபூரணமாக நம்பினார். அதை நோக்கியே தன்னுடைய போராட்டக் களங்களைக் கட்டமைத்துக் கொண்டார். காந்தியின் அகிம்சைப் போராட்டம் சுதந்தரப் போராட்டக் களத்தை விரிவுபடுத்தியது என்றால், பகத் சிங்கின் வீரமும் தியாகமும் பல இளைஞர்களைப் போராட்டக் களத்துக்கு அழைத்து வந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் துடிதுடிப்பான அத்தியாயங்களுள் ஒன்று, பகத் சிங்கின் வாழ்க்கை!