இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு


Author: பா.மாணிக்கவேலு, எம்.ஏ.,

Pages: 319

Year: 2013

Price:
Sale priceRs. 135.00

Description

உலக வல்லரசுகளும், அண்டை நாடுகளும் இந்தியத் துணைக் கண்டத்தை உற்று நோக்கி வருகின்றன. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வரும் நாடான இந்தியா, உலகத்தின் பார்வைக்கு வளர்ந்து வரும் வல்லரசு. 1947&க்கு முன்னால் இந்தியாவின் நிலைமை என்ன? ‘சக உணர்வுகளால் ஒன்றுபட்டு, தங்களுக்குள் அதிக அளவில் விரும்பி, இசைந்துபோகும் மனப் பக்குவம் பெற்று, தங்களுக்கென்று ஏற்படுத்திக்கொண்ட, அதிலும் தாங்களே நடத்துகின்ற அரசாங்கத்தின் ஆதரவில் வாழ விரும்பும் மக்கட் கூட்டத்தினரே தேசிய இனத்தவராவர்’ என்பது தேசிய இனம் குறித்த அறிஞர் மில் என்பவருடைய கூற்று. ஆனால், ஒரே இனம், ஒரே மொழி, ஒரே சமயம் அல்லது இசைவான பண்பாடு, வரையறுக்கப் பெற்ற நிலப் பரப்பில் நிலைத்து வாழ்தல், பொதுவான வரலாற்று மரபுகள், அரசியலில் பொதுவான நோக்கங்கள், பொதுவான அன்னிய ஆதிக்கத்துக்கு உட்பட்டிருத்தல் போன்ற பல சூழ்நிலைகளில் இத்தகைய உணர்வு தோன்றும். இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இனக் குழுக்கள், வேறுபட்ட மதங்கள், கலாச்சார பின்னணியில் இந்திய தேசியம் என்பது எப்படி சாத்தியமானது? இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கிய காலத்தில் நாட்டு மக்களிடையே இந்திய தேசிய உணர்வு தோன்றியிருக்கவில்லை. ஆனால், காலப்போக்கில் இந்தியா நமது நாடு, நாமெல்லாம் இந்தியர், நமது நாட்டை அந்நியர் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற உணர்வுகள் நாட்டு மக்களிடையே வளரத் தொடங்கின. இந்த எண்ணம் ஒருவரால் வந்ததல்ல. எத்தனை பேரின் தியாகங்கள்? எத்தனை வேள்விகள்? எத்தனை போராட்டங்கள்? வரலாற்-று மரபின் மறுமலர்ச்சியும், மக்களுடைய மனவெழுச்சியும் சேர்ந்து இந்திய தேசிய இயக்கம் உருவானது. இந்த இயக்கத்தின் வரலாறு உன்னதமானது. தேசப் பிதா அண்ணல் காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பாலகங்காதர திலகர், மோதிலால் நேரு என தேசிய இயக்கத் தலைவர்கள் அன்றைய அரசியல் சூழலில் அந்நிய சக்தியை எதிர்கொண்டது எப்படி? இந்திய தேசிய வரலாறு எனும் இந்தப் புத்தகம் நம் நாட்டின் எழுச்சி வரலாற்றைச் சொல்கிறது. நூல் ஆசிரியர் பா.மாணிக்கவேலு, இந்திய தேசிய இயக்கத்தின் வரலாற்றை கால வரிசைப்படி துல்லியமாக தொகுத்துள்ளார். மக்கள் சக்தியின் மகத்துவத்தையும் சுதந்திரத்தின் மகத்துவத்தையும் புரிந்துகொள்ள இந்த நூலைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

You may also like

Recently viewed