இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம் - பெரு முதலாளிகளின் மறுபக்கம்


Author: வே. குமரவேல்

Pages: 1000

Year: 2013

Price:
Sale priceRs. 300.00

Description

மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு அவசியம் என்பதைக் குறிப்பால் உணர்த்தி, ஒவ்வொரு கட்டுரையிலும் படிப்பதற்கான ஏராளமான பரிந்துரைகளையும் செய்திருக்கிறார் ஆசிரியர்.அரசியல், அதிகாரிகள், முதலாளிகள் கூட்டுக் கொள்ளையில் ஊடகங்களும் சேர்ந்துகொண்டு வாய்மூடி மௌனியாக இருந்த கதைகளும் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை எங்காவது பேசப்பட்ட, எழுதப்பட்ட குறிப்புகளின் அடிப்படையிலானவை.அந்தப் பதிவையும் நேர்மையுடன் செய்திருக்கிறார் ஆசிரியர்.நன்றி: தினமணி, 9/12/13.

You may also like

Recently viewed