Description
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம் என்ற பாரதியின் கனவு, இன்றளவும் நிறைவேறவில்லை என்று ஆதங்கப்படும் நூலாசிரியர் உலகின் தலையாய பிரச்னையாக உருவாகி வரும் தண்ணீர்ப் பிரச்னையை மையமாக வைத்து, பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.கங்கை காவிரி இணைப்பு, சர்.ஆர்தர் காட்டனின் திட்டம், கேப்டன் தஸ்தூரின் பூமாவைக் கால்வாய்த் திட்டம், சேது கங்கை இணைப்பு, காவிரி நீர்ப் பிரச்னை என, பல தலைப்புகளில் பயனுள்ள பல விஷயங்களை ஆய்வு செய்துள்ள நூலாசிரியர், தாமிரபரணியில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க, நதிகளைப் பாதுகாக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த வழக்கு அதன் வாதங்கள் வரை எடுத்தாண்டுள்ளார்.தமிழக அரசும், மத்திய அரசும் விழிப்புடன் செயல்பட இத்தகைய நூல்கள் வரவேற்கப்பட வேண்டும்.- பின்னலூரான்.நன்றி: தினமலர், 8/9/13