Description
அமெரிக்காவின் கார்னகி மெலன் பல்கலைக்கழக கணினி துறை பேராசிரியர் ரேண்டிபாஷ். அழகான மனைவி, 3 இளம் குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் அவருக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பது திடீரெனத் தெரியவருகிறது. வாழ்வின் கடைசிக் கட்டத்தில் இருந்தாலும் ரேண்டிபாஷ் துவண்டுவிடவில்லை.தன் மனைவி குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து செய்யக்கூடியவற்றை குறைந்த நாட்களிலேயே செய்ய முனைகிறார். இதற்கிடையே பல்கலைக்கழகத்தில் இறுதிச் சொற்பொழிவு ஆற்ற அவருக்கு அழைப்பு வருகிறது. தாங்கள் இறந்து போவதற்கு முன்பு கடைசி முறையாக மாணவர்களிடம் ஒரு உரை நிகழ்த்த வாய்ப்பு அளிக்கப்பட்டால் எதைப் பேச விரும்புவார்களோ அதைப் பேசுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுதான் இறுதிச் சொற்பொழிவு ஆகும். இதன்படி ரேண்டிபாஷ் ஆற்றிய உரையின் தொகுப்புதான் இந்தப் புத்தகம்.46 மொழிகளில் வெளியாகி இருக்கிறது. 50 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி சாதனை படைத்து உள்ளது. தமிழில் நாகலட்சமி சண்முகம் அழகாக மொழிபெயர்த்து இருக்கிறார்.நன்றி: தினத்தந்தி, 9/10/13.