Description
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தி யுகம் முக்கியமானது. அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி, வெள்ளையனை விரட்ட முடியும் என்று மகாத்மா காந்தி நினைத்தார். அதே காலகட்டத்தில், ஆயுதம் ஏந்தி போராடினால்தான் சுதந்திரம் கிடைக்கும் என்று காங்கிரசிலேயே ஒரு பகுதியினர் எண்ணினார்கள்.அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் இறுதி வெற்றி மகாத்மா காந்திக்குத்தான் கிடைத்தது. சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை அருமையாக எழுதியுள்ளார் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபதிப்பாக அழகிய வடிவமைப்பில் இந்த நூல் வெளிவந்துள்ளது.இளைய தலைமுறையினரும் சுதந்திரப்போராட்டம் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.நன்றி: தினத்தந்தி, 9/10/13