Description
அமானுஷ்யக் கதை என்றாலே ஜமீன், பேய்பங்களா இருந்தே ஆக வேண்டும். அதில் இருந்து ‘கர்ணனின் கவசம்’ முற்றிலுமாக வேறுபடுகிறது. நாம் அறியாத, உலகின் காஸ்ட்லியான சமாச்சாரம் ஒன்றை புனைகிறது. பெட்ரோலை விட, தங்கத்தை விட காஸ்ட்லியான அது என்னவென்று வரப்போகும் அத்தியாயங்களில் தெரிந்துக் கொள்ளலாம். அனேகமாக ஏதோ தனிமமாக இருக்கலாம். அது இந்தியாவில் எங்கோ புதைந்திருக்கிறது. அதைத்தேடி சர்வதேசக் கும்பல் ஒன்று இங்கே தேடுதல் வேட்டை நடத்துகிறது. பரபரவென்று ஹாலிவுட் பாணியில் ஓடுகிறது திரைக்கதை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் நாலு பிரிவுகள். வெவ்வேறு பாத்திரங்கள், வெவ்வேறு லோக்கேஷன். By-யுவகிருஷ்ணா