Description
நமது காலம் எத்தகையதொரு நீதியற்ற காலமாக இருக்கிறது என்பதற்கும் அது முடிவற்ற வேட்டை நிலமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் இந்தக் கவிதைகள் சாட்சியம் கூறுகின்றன. மனிதர்களின் இருப்புக் குறித்த தத்தளிப்புகளையும் உறவுகளின் மர்ம முடிச்சுகளையும் அவை இடையறாமல் தேடிச் செல்கின்றன.இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அச்சமூட்டும் கேள்விக்கு நம்மை உறையச் செய்யும் பதில்களை எதிர்கொள்வதுதான் மனுஷ்ய புத்திரனின் ஆதரமான செயல்பாடாக இந்தக் கவிதைகளில் இருக்கிறது.1983ல் பதினாறாவது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட மனுஷ்ய புத்திரன் தனது எழுத்து வாழ்க்கையின் முப்பதாம் ஆண்டில் தனது 11வது கவிதைத் தொகுப்பை கொண்டு வருகிறார்.