Description
இத்தாலியில் அரசியல் இருந்தது, அதிகாரம் இருந்தது, ஆட்சி இருந்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் கிடையாது. பத்திரிகைகள் கிடையாது. தேர்தல்கள் கிடையாது. அத்தனைக்கும் காரணம் ஒற்றை மனிதர், அதிகார வெறியும் யுத்தப் பசியும் கொண்ட ஒரு மனிதன் எத்தனை உயரத்துக்கு வளர்வான், எத்தனை ஆழத்துக்கு வீழ்வான் என்பதற்கு இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியே முதன்மையான உதாரணம். பயந்துகொண்டு வியந்துகொண்டும் வாசிக்க வேண்டிய வாழ்க்கை !!