துப்பாக்கிகள் கிருமிகள் எஃகு


Author: ஜாரெட் டைமண்ட்

Pages: 630

Year: 2014

Price:
Sale priceRs. 630.00

Description

தமிழில்: ப்ரவாஹன்இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், செல்வாக்கோடும் இருக்கின்றன; அதே வேளையில், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் சுரண்டப்படும் நிலையிலும் இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? வரலாறு, அறிவியல், இலக்கியம் என்று எல்லாவற்றிலும் ஐரோப்பாதான் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படியென்றால், உலகின் மற்ற நாடுகளில் வரலாறு, அறிவியல், இலக்கியம் எதுவுமே இல்லையா? இந்தக் கேள்விகளைப் பற்றியெல்லாம் ஜாரெட் டைமண்ட் யோசித்துப் பார்த்ததோடு மட்டுமல்லாமல், 15 ஆண்டுகள் தீவிரமாக ஆய்வுசெய்ததன் பலன்தான் இந்தப் புத்தகம். 1997-ல் வெளிவந்த இந்தப் புத்தகம், புலிட்ஸர் விருதைப் பெற்றது. அறிவியல் தொடர்பான நூல்களில் தனியிடமும் பிடித்துவிட்டது. மனித குலத்தின் கடந்த 13,000 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் மிக முக்கியமான புத்தகம் இது. தமிழில் சுயமாக அறிவியல் புத்தகங்களை எழுதுபவர்கள் கிட்டத்தட்ட இல்லாத நிலையில், இதுபோன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள் சமூக முக்கியத்துவம் உடையவையாக ஆகின்றன.

You may also like

Recently viewed