Description
தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் (Johann Philip Fabricius). ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைக்கழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாத்திரங்கள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறுப்பேற்ற இவர் 1740 ஆம் ஆண்டு மதப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தார். இவர் உருவாக்கிய மலபார் அகராதி என்று அறியப்படுகின்ற தமிழ் - ஆங்கில அகராதி 1779 இல் வெளியானது. இவ்வகராதி பல்வேறு காலகட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. 1972 இல் வெளியான இவ்வகராதியின் நான்காம் பதிப்பின் மறுபதிப்பு இது.