Description
ஐ.ஏ.எஸ். தேர்வு என்றாலே மாணவர்களுக்கு ஒருவித பயம் இருப்பது உண்மை. 30&40 வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்திலிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் இந்த விகிதம் மிகவும் குறைந்தது. சமீப காலங்களில் தேர்ச்சி விகிதம் அதிகரித்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வு பற்றிய புரிதல் அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனாலும் தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். அதற்குப் பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே மாணவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு டாக்டர் சங்கர சரவணன் மற்றும் டாக்டர் த.ராமர் ஆகியோர் இணைந்து எழுதிய இந்த ‘இந்தியா கையேடு’ பெரிதும் உதவும். ஐ.ஏ.எஸ். தேர்வு என்பது பல பகுதிகளை உள்ளடக்கியது. அதில் ஒரு பகுதியான இந்தியாவைப் பற்றி முழுமையாக இந்த நூலில் விவரிக்கப்பட்டு உள்ளது. இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசமைப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலை, இலக்கியம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே தொகுப்பாகத் தந்துள்ளார்கள் நூல் ஆசிரியர்கள். 2013-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் ஐ.ஏ.எஸ். முதல் கட்டத் தேர்வில் இந்தியா பற்றிக் கேட்கப் பட்ட பல வினா - விடைகள், விளக்கத்தோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி மற்றும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தாயாராகி வரும் கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் தயாராகப்போகும் பள்ளி மாணவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல். புத்தகங்கள் வாங்குவதற்கு செய்யும் செலவு... எதிர்கால வெற்றிக்கும் அறிவுக்குமான முதலீடு!