Description
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்... நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்? துருப்பிடித்த திரிசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காளிணிந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில், என் உடுக்கு-களையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு, ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் ‘நீல ஓம்’களை நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?