Description
ஒவ்வொரு சீர்திருத்தவாதியும், ஏன் ஒவ்வொரு இந்தியனும், தோழர் சிதம்பரம் அவர்கள் எழுதிய இப்புத்தகத்தைப் படிப்பது மட்டுமின்றி ஒரு பிரதியை தமக்கென வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஆலய பிரவேசத்திற்கு ஆதரவாக பல கடுமையான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து கொண்டிருந்தாலும், பலர் தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிப் போராடினாலும், தோழர் சிதம்பரம் தயாரித்துள்ள இந்த ஆயுதமே ஆற்றல் மிக்கது; இதுவே இறுதி வெற்றியைப் பெற்றுத் தரும்.- தந்தை பெரியார்