காலத்தின் திரைச்சீலை


Author: ட்ராட்ஸ்கி மருது, தொகுப்பு அ.வெண்ணிலா

Pages: 720

Year: 2014

Price:
Sale priceRs. 300.00

Description

வாயால் சொல்லப்படுகிற வார்த்தைகளின்மூலம் பலநேரம் நமக்குப் பொய்யே கிட்டுகிறது. ஆனால் கோடுகள் ஒருபோதும் பொய்யே சொல்வதில்லை என்கிற ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சொற்களுடன் தொடங்குகிறது அகநி பதிப்பகம் வெளியிட்டுள்ள காலத்தின் திரைச்சீலை ட்ராட்ஸ்கி மருது என்கிற நூல். நூலை கவிஞர் வெண்ணிலா தொகுத்துள்ளார். மருதுவின் தாயார் ருக்மணி, மனைவி ரத்தினம், தம்பி போஸ் ஆகியோர் மருதுவைப் பற்றிச் சொல்லும் ஈரம் படர்ந்த நினைவுகளை எழுத் தாக்கி இருக்கிறார். இது மருதுவின் பின்புலம் பற்றிய ஆழமான அறிமுகத்தைத் தருகிறது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், யாமினி கிருஷ்ணமூர்த்தி,எஸ்.வி.ராஜதுரை, சா.கந்தசாமி, காசி ஆனந்தன், பேராசிரியர் மு.நாகநாதன், பா.செயப்பிரகாசம், இயக்குநர் மிஷ்கின், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, வ.கீதா, வீ.அரசு, வெ.இறையன்பு, இளையபாரதி, தமிழச்சி தங்கபாண்டியன், நாசர், ரா.கண்ணன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இந்நூலில் மருது பற்றி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். மருதுவின் நீண்ட நேர்காணல் ஒன்றையும் அப்பண்ணசாமி இந்நூலில் ஒழுங்குசெய்துள்ளார். வாசிக்க மட்டுமல்லாமல் காட்சி அனுபவமாகவும் இந்நூல் புகைப்படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றுடன் வெளியாகி உள்ளது.

You may also like

Recently viewed