Description
பாரதியார் எழுதிய 'குயில்பாட்டு' காவியத்தில் சோலைக்குள் தற்செயலாகத் தங்க தேர்ந்த ஒருவன் ஒரு மரத்தில் குயில் பாடும் பாட்டைக் கேட்டு மயங்குவதாக ஒரு காட்சி உள்ளது. அதன் இசைக்கு பல பொருள்களைக் கற்பித்து மகிழ்கிறான். அந்த மயக்கத்தில் அடுத்த நாளும் அதே சோலைக்குச் சென்று, அதே மரத்தில் அந்தக் குயிலைத் தேடுகிறான். அங்கே குயில் இல்லை. ஆனால் ஒரு குரங்கு இருக்கிறது. எழுத்து வாழ்க்கையிலும் அப்படித்தான் நேர்கிறது. குயிலுக்காகக் காத்திருக்கும் சமயங்களில் குரங்குகள் தென்படுகின்றன. குயில் வரும் நேரத்துக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. குயிலாகக் காண நேர்ந்த தருணங்களே இத்தொகுதியின் சிறுகதைகளாக மலர்ந்திருக்கின்றன.