Description
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார்.தாய், தந்தையர் பாசத்தில் ஆரம்பிக்கும் அவரது பயணம், நட்புகள், உறவுகள், ஆசான்கள், அறிவியல், ஆன்மிகம் மற்றும் சமூகம் என அனைத்துத் தரப்பிலும் தொடர்ந்து பயணிக்கிறது. விடா முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை இருந்தால் சாமானிய மனிதனும் சாதனையாளராக முடியும் என்பதை மிகத் தெளிவாக விவரிக்கும் அற்புதமான படைப்பு.தனது பயணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள், தனது வாழ்க்கையில் எத்தகைய தாக்குதல்களை ஏற்படுத்தின என்பதை இந்நூலின் மூலம் கலாம் எடுத்துரைத்துள்ளார். அனைவரும் புரிந்து கொள்ளும்வகையில் எளிமையான மொழிபெயர்ப்பு. ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் எனது பயணம் கனவுகளுக்குச் செயல் வடிவம் கொடுக்க நிச்சயம் தூண்டுதலாக இருக்கும்.நன்றி: தினமணி, 3/3/2014.