என்றும் இன்பம் பெருகும்


Author: மா.கி. ரமணன்

Pages: 165

Year: 2014

Price:
Sale priceRs. 100.00

Description

வாழ்வை வளமாக்கும் திருமந்திரம் எனும் நூலை எழுதிய இந்நூலாசிரியர் மறுமை நோக்கி கொடை வழங்காமல் கேட்பவன் வறுமை நோக்கி வழங்க வேண்டுமென்னும் புறநானூறு வரிகளுக்கேற்ப பக்தி இலக்கியங்களை சமுதாய நன்மைக்காக பரப்பி வரும் தொண்டர்.இந்நூலில் என்றும் இன்பம் பெருகும், ஆடல் சபையும் பாடல் சுவையும், வள்ளலாரும் ஒற்றியூரும், தமிழில் ஐந்தருவி, தூது சென்ற ஐவர், இப்படி 21 கட்டுரைகள் உள்ளன. பிரம்மாவாகவும், வசிட்டராகவும் இருந்து இன்றும், சிலர் செய்யும் மரபு வழி புரோகிதம் பிராமாதம் எனும் வழி காட்டும் புனிதர் கட்டுரையும், வயிற்றுப் பசிக்கு உணவகம், அறிவுப் பசிக்கு நூலகம், ஆன்மப் பசிக்கு ஆலயம் என்னும் கற்கோயிலும் சொற்கோயிலும் கட்டுரையும் வித்தியாசமானவை. பக்தி நெறியைப் பண்புடன் வளர்க்கும் முத்தான கட்டுரைகளின் தொகுப்பு.

You may also like

Recently viewed